சிறந்த நடிகைக்கான விருது 
செய்திகள்

பாஃப்டா விருது பெற்ற 1917 படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா?

கடந்த 5 வருடங்களாக சிறந்த படமாக பாஃப்டா விருது பெற்ற எந்தப் படமும்... 

எழில்

பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்ட்ஸ் என்கிற பாஃப்டா விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

முதலாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட 1917 படம் பாஃப்டா விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. 

சிறந்த படம், சிறந்த பிரிட்டன் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை 1917 படம் தட்டிச் சென்றது. 

உலகம் முழுக்கக் கவனம் பெற்ற ஜோக்கர் படத்துக்கு சிறந்த நடிகர் உள்ளிட்ட 3 விருதுகள் கிடைத்துள்ளன. திரையுலகம், தொலைக்காட்சி ஊடகம், விடியோ கேம் துறை ஆகிய தரப்பிலிருந்து 6000 பேர் பாஃப்டா விருதுகளுக்கான குழுவில் உள்ளார்கள். 

1917 படம் சிறந்த படத்துக்கான பாஃப்டா விருதைப் பெற்றிருப்பது அப்பட ரசிகர்களுக்குக் கவலையை அளித்துள்ளது.  காரணம், கடந்த 5 வருடங்களாக சிறந்த படமாக பாஃப்டா விருது பெற்ற எந்தப் படமும் ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதை வென்றதில்லை. இதனால் மற்ற படங்களின் நிலைமை 1917 படத்துக்கும் நேருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

பாஃப்டாவின் முக்கிய விருதுகள்

சிறந்த படம் - 1917
சிறந்த பிரிட்டன் படம் - 1917
சிறந்த இயக்குநர் - Sam Mendes (1917)
சிறந்த ஒளிப்பதிவு - 1917 (Roger Deakins)
சிறந்த படத்தொகுப்பு - Le Mans '66 (Andrew Buckland, Michael McCusker)
சிறந்த நடிகர் - Joaquin Phoenix (Joker)
சிறந்த நடிகை - Renée Zellweger (Judy)
சிறந்த பிறமொழிப் படம் - Parasite
சிறந்த ஆவணப்படம் - For Sama
சிறந்த அனிமேஷன் படம் - Klaus
சிறந்த அசல் இசை - Joker (Hildur Gudnadottir)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: விஹான் மல்ஹோத்ரா சதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 353 ரன்கள் இலக்கு!

172 சராசரியுடன் விளையாடும் யு19 ஆஸி. வீரர் நிதீஷ் சாமுவேல்!

சமூகத்தில் பின்பற்ற வேண்டிய 10 விதிமுறைகள்!

ஐரோப்பிய யூனியனின் 96% பொருள்களுக்கு வரி குறைத்த இந்தியா! முழு விபரம்!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT