முகப்பு
செய்திகள்

வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்குக் காயம்!

இந்தத் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியதால் #GetWellsoonThala என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள். 

Updated On : 19 பிப்ரவரி, 2020 at 11:51 AM
பகிர்:

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித்துக்குச் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கும்போது காயம் ஏற்பட்டுள்ளது. பைக்கில் துரத்திச் செல்லவேண்டிய காட்சியில், எதிர்பாராதவிதமாக பைக்கிலிருந்து அஜித் கீழே விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் காயங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் அஜித். 

படப்பிடிப்பு முடிந்த பிறகே மருத்துவரைச் சந்தித்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அடுத்தச் சில நாள்களுக்கு அஜித் ஓய்வில் இருக்கவுள்ளார். 

Advertisement

இந்தத் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியதால் #GetWellsoonThala என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள். 

அஜித்தால் வலிமை படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது என்று கடந்த சில நாள்களாக வெளியான தகவல்களுக்கு வலிமைப் படக்குழுத் தரப்பு மறுத்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்ததாக ஹைதராபாத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடரவுள்ளது. அதுவரை அஜித் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.