முகப்பு
செய்திகள்

இளைய மகள், மருமகன், பேரனுடன் ரஜினியின் புதிய புகைப்படம்

தனது இளைய மகள் செளந்தர்யாவின் குடும்பத்தினருடன் ரஜினி எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

தனது இளைய மகள் செளந்தர்யாவின் குடும்பத்தினருடன் ரஜினி எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் கார் ஓட்டுநர் யாரையும் அனுமதிக்காமல் முகக்கவசம் அணிந்து சீட் பெல்ட் போட்டுக்கொண்டு, லம்போர்கினி சொகுசு காரை தானே ஓட்டிய ரஜினியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் நேற்று வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டது. 

இந்நிலையில் தனது இளைய மகள் செளந்தர்யா, அவருடைய கணவர் விசாகன், பேரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தையும் ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →