முகப்பு
செய்திகள்

சௌமித்ர சாட்டர்ஜி மறைவு: பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்

​பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி (85) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:


பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி (85) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சௌமித்ர சாட்டர்ஜிக்கு கடந்த அக்டோபர் 6-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சௌமித்ர சாட்டர்ஜி காலமானார். இவரது மறைவின் மூலம் வங்காளப் படங்களில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

சௌமித்ர சாட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவருடன் 14 படங்களில் இணைந்து பணியாற்றிவர் செளமித்ர சாட்டர்ஜி. மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை பெற்றுள்ளார். பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →