செய்திகள்

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்

அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அபிஷேக் பச்சனுடன் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கரோனா நோய்த்தொற்று உறதி செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய், அவா்களது மகள் ஆராத்யா ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

ஐஸ்வா்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோா் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

கரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தானும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அபிஷேக் பச்சன் கூறினார். இந்நிலையில் ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT