முகப்பு
செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாயைச் சீரமைத்துள்ள நடிகர் கார்த்தி

8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சூறாவளி காய்வாயை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு சீரமைத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 13 கி.மீ. நீளமுள்ள சூறாவளி காய்வாயை ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன் நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் அமைப்பு கடந்த 21 நாள்களாக சுமார் ரூ. 4 லட்சம் செலவில் சீரமைத்துள்ளார்கள்.

இச்சீரமைப்பின் மூலம் அச்சுற்று வட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் 10 கிராம மக்களும் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →