செய்திகள்

நடிகர் விவேக்குக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் என்னென்ன?

சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகளுக்குப் பலன் இல்லை.

DIN

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59.

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறியதாவது:

நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். கொண்டுவரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம். எக்மோ செய்தபிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழக்க நேர்ந்துள்ளது. பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகளுக்குப் பலன் இல்லை. இந்த உடல்நலப் பிரச்னை ஒரே நாளில் வராது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாக அவர் தரப்பில் சொன்னார்கள் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

கொலம்பியாவில் இந்திய வாகனங்களை பார்ப்பதில் பெருமை! ராகுல்

மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?

SCROLL FOR NEXT