செய்திகள்

எடை குறைந்து ஒல்லியான நடிகை குஷ்பு : ஆச்சரியத்தில் ரசிகர்கள் (புகைப்படம்)

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடை குறைந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

DIN

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடை குறைந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினிகாந்த்துடன் இணைந்து அவர் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. 

ஏற்கனவே ரஜினிகாந்த் - குஷ்பு இணைந்து நடித்த 'மன்னன்', 'அண்ணாமலை' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால் படத்தின் காட்சிகளை காண ஆர்வம் அதிகரித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அவரது சுட்டுரைப் பக்கம் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் முன்பைக் காட்டிலும் சற்று எடைக் குறைவாக காட்சியளிக்கிறார். ''கடினமாக உழைத்தால் முடிவு இப்படித்தான் இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், மாளவிகா, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்: நயினார் நாகேந்திரன்

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

ஈதலும் இசைபட வாழ்தலும்...

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

SCROLL FOR NEXT