செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் பிரபல தமிழ் கதாநாயகன் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்

நடிகர் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் பிரபல நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

DIN

நடிகர் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் பிரபல நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'அன்பு', 'காதல் கிசு கிசு', 'மஞ்சள் வெயில்' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த பாலா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இயக்குநர் சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பாலா தனது முகநூல் பக்கத்தில், ''நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமைக்குரிய தருணம். தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். 

பாலா தமிழ் மட்டுமல்லாமல், மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருந்த 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், மலையளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். கடைசியாக பாலா தமிழில் கார்த்தி, ஜோதிகாவுடன் இணைந்து 'தம்பி' படத்தில் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கன அடி உபரிநீா் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

திருமாகறலீசுவரா் கோயிலில் நவகலச யாகம்

SCROLL FOR NEXT