செய்திகள்

அடுத்த கோவை சரளா இவரா ? : பிரபல இயக்குநரின் கணிப்பு: உங்கள் கருத்து என்ன?

அடுத்த கோவை சரளாவாக மிளிரும் அளவுக்கு தனித்திறமையும் நகைச்சுவை நடிப்பும் கொண்டவர் அறந்தாங்கி நிஷா என பிரபல இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திச் சேவை

அடுத்த கோவை சரளாவாக மிளிரும் அளவுக்கு தனித்திறமையும் நகைச்சுவை நடிப்பும் கொண்டவர் அறந்தாங்கி நிஷா என பிரபல இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த 'கைதி' படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் மிரட்டியவர் அர்ஜூன் தாஸ். அவரது நடிப்புக்கும், மிரட்டலான குரலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதனையடுத்து தளபதி விஜய் - விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 'மாஸ்டர்', நெட்ஃபிளிக்ஸில் வெளியான அந்தகாரம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாரட்டப்பட்டது. 

இந்த நிலையில் பிரபல இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை படப் புகழ் துஷாரா,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

தற்போது விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா மற்றும் பவா லக்ஷ்மனன் ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறந்தாங்கி நிஷா, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். மேலும் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இதுகுறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், பவா லட்சுமணனை திரையில் பார்த்தாலே வாம்மா மின்னல் என்ற வசனம் நினைவில் சிரிப்பை வரவழைக்கும். அறந்தாங்கி நிஷா அடுத்த கோவை சரளாவாக மிளிரும் அளவுக்கு தனித்திறமையும் நகைச்சுவை நடிப்பும் கொண்டவர். பல தருணங்களில் அவரது திறமையை உணர்ந்தேன். இருவரும் என் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT