வைரலாகும் 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் 'தாக்கோ தாக்கோ மேகா' என்கிற முதல் பாடலை இன்று மதியம் வெளியீடு செய்திருந்தார்.
ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் பாடிய அப்பாடல் வெளியான 6 மணி நேரத்தில் தெலுங்கில் மட்டும் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க | மிகவும் ஒல்லியான நடிகர் சிம்பு: மிரண்டு போன ரசிகர்கள்
மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ட்விட்டரில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அந்தப் பாடலைப் பகிர்ந்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் 'ஓடு ஓடு ஆடு' என்கிற வரியில் ஆரம்பமாகும் இப்பாடலை பென்னி தயால் பாடியிருக்கிறார்..
புஷ்பா படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.