செய்திகள்

வலிமையில் இருந்து பாதியில் விலகி மற்றொரு ஹீரோ படத்தில் இணைந்த பிரபலம்?

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை பட ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, சிரஞ்சீவி படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை பட ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, சிரஞ்சீவி படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 'வேற மாறி' பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்கு படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் மோகன்லால் தனது சுட்டுரைப் பக்கத்தில், பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்தப் பயணத்தை துவங்குகிறேன். 

இந்த முறை சிறப்பான குழுவுடன் இணைகிறேன். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை  இயக்குநர் சுரேஷ் ராஜன், சண்டைப் பயிற்சி சில்வா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரியவிருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சிரஞ்சீவி படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் செய்கிறாரா? அல்லது வலிமை படத்தில் இருந்து விலகி விட்டாரா? என்ற தகவல்கள் இல்லை. 

நடிகர் சிரஞ்சீவி படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT