முகப்பு
செய்திகள்

செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவு
பகிர்:

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

'ராக்கி' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தை இயக்குகிறார். ஆக்சன் , த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பைப் பெற்றது.

டப்பிங் பணியில் செல்வராகவன் 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன்  இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட் ' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் செல்வராகவன்.

தற்போது 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் ஆரம்பமாகி இருப்பதால்   அதில் செல்வராகவன் பங்கேற்றிருக்கிறார்.

இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வெளியிடுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →