செய்திகள்

அசத்தும் தமன்னா: அந்தாதுன் தெலுங்கு ரீமேக் டிரெய்லர் வெளியானது

தபு கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மிகவும் பொருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

DIN

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

அந்தாதுன் படம் தமிழிலும் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் அந்தகன் என்கிற தலைப்பில் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார்.  ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் அந்தாதுன் தெலுங்கு ரீமேக், மேஸ்ட்ரோ என்கிற பெயரில் உருவாகி அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் நிதின் கதாநாயகனாக நடித்துள்ளார். ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நபா நடேஷும் தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடித்துள்ளார்கள். மேர்லபகா காந்தி இயக்கியுள்ளார். 

டிரெய்லரில் தபு கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மிகவும் பொருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்தாதுன் படத்தை அப்படியே எடுத்ததோடு சரியான நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால் மேஸ்ட்ரோ படம் ரசிகர்களைக் கவரும் எனத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT