செய்திகள்

பிரபல நடிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அனில் கும்ப்ளே

இதை விட வேறு சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்? ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி...

DIN

கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளுக்காக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே.

1997 முதல் நடித்து வரும் கன்னட நடிகரான சுதீப் - நான் ஈ, புலி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் செப்டம்பர் 2 அன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சுதீப். இதையடுத்து ட்விட்டரில் சுதீப் பிறந்த நாளுக்கான போஸ்டரை (சிடிபி, காமன் டிஸ்பிளே போஸ்டர்) ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே. என்னுடைய நண்பரும் மூத்த நடிகருமான கிச்சா சுதீப்பின் பிறந்த நாளுக்கான சிடிபி-யை வெளியிடுவதில் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனில் கும்ப்ளே போன்ற பிரபல கிரிக்கெட் வீரர், தன் பிறந்த நாளுக்கான போஸ்டரை வெளியிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார் சுதீப். ட்விட்டரில் அவர் கூறியதாவது: இதை விட வேறு சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்? ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT