முன்னணி இயக்குநர்களின் புதிய தயாரிப்பு நிறுவனம்
தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தங்களுடைய படங்களையும் புதுமுக இயக்குநர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்
தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தங்களுடைய படங்களையும் புதுமுக இயக்குநர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ் ' போன்ற நிறுவனங்கள் பல நல்ல படங்களை தயாரித்து வந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | நடிகர் விவேக்கின் மரணத்துக்கு காரணம் தடுப்பூசியா?: மனித உரிமை ஆணையம் விசாரணை
Advertisement
இந்நிலையில் தமிழின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , ஷங்கர் ,ஏ.ஆர் முருகதாஸ் , கெளதம் மேனன் , வெற்றிமாறன் , மிஷ்கின் , லிங்குசாமி , வசந்தபாலன் , லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.
'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
மேலும் குறும்படங்கள் , இணையத் தொடர்களையும் இந்த தாயரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.