செய்திகள்

பிரபல வில்லன் நடிகருடன் இணைந்து ஹீரோவாக களமிறங்கும் சீமான்: வெளியான முதல் பார்வை போஸ்டர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதாநாயகனாக நடிக்கும் அமீரா என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

DIN

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதாநாயகனாக நடிக்கும் 'அமீரா' என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சீமான், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து 'அமீரா' என்ற படத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, 'டூலெட்' பட இயக்குநர் செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (வியாழக்கிழமை) துவங்கியது.  

இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT