முகப்பு
செய்திகள்

பாடகர் அறிவின் புதிய பாடல் இன்று வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமான 'அரண்மனை-3'  தற்போது திரையில் வெளியாக இருக்கிற நிலையில் அப்படத்தின் முதல் பாடலை இன்று (ஆக -29 ) மாலை படக்குழு வெளியிடுகிறார்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பாடகர் அறிவின் புதிய பாடல் இன்று வெளியீடு
பகிர்:

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமான 'அரண்மனை-3'  தற்போது திரையில் வெளியாக இருக்கிற நிலையில் அப்படத்தின் முதல் பாடலை இன்று (ஆக -29 ) மாலை படக்குழு வெளியிடுகிறார்கள்.

சி.சத்யா இசையமைப்பில் 'ரடரடப்படா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை பாடலாசிரியரும் , பாடகருமான அறிவு எழுதிப் பாடியிருக்கிறார். தனித்துவமான பாடல் வரிகளை எழுதும் அறிவு இப்படத்தில் பங்காற்றியிருப்பதால் இந்த பாடலுக்கு ஆவல் எழுந்துள்ளது.

மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்   'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →