செய்திகள்

'மாநாடு 2' படத்தில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறாரா?: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசியத் தகவல்

மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

'மாநாடு' படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினர். 

இந்த நிகழ்வில் கதாநாயகன் சிம்பு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அப்போது பேசிய வெங்கட் பிரபு, ''மாநாடு இரண்டாம் பாகத்தில் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஏற்ற தனுஷ் கோடி வேடமும் இடம்பெறும் என்றார். 

படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடம் இறந்ததாக காட்டப்படும். ஆனால் இறுதியில் அப்துல் காலிக்காக நடித்த சிம்புவுக்கு டைம் லூப் மீண்டும் நடைபெறுவதாக காட்டப்படும். அவருக்கு டைம் லூப் நடந்தால் தனுஷ் கோடி வேடமும் திரும்ப வரும் என்பார். 

மேலும் முதலில் தனுஷ்கோடி வேடத்துக்காக தெலுங்கு நடிகர் ரவி தேஜாவை அனுகினோம். ஆனால் அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் அவரால் மாநாடு படத்தில் நடிக்க முடியவில்லை'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

SCROLL FOR NEXT