செய்திகள்

200 மில்லியன் ஆதரவாளர்கள்: யூடியூப் தளத்தில் சாதனை படைத்த இந்திய நிறுவனம்

DIN

இந்திய இசை நிறுவனமான டி சீரீஸ், யூடியூப் தளத்தில் 200 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்த முதல் சேனல் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

மறைந்த குல்ஷன் குமார் 1983-ல் தொடங்கிய திரைப்பட இசை நிறுவனம் - டி சீரிஸ் (T-Series). புகழ்பெற்ற பாலிவுட் படங்களின் பாடல்களை வெளியிட்டு நெ.1 இசை நிறுவனமாக உள்ளது. 

யூடியூப் தளத்தில் டி சீரீஸுக்கு எனத் தனியாக சேனல் உள்ளது. இந்நிலையில் டி சீரீஸ் யூடியூப் தளம் 200 மில்லியன் ஆதரவாளர்கள் (subscribers) என்கிற இலக்கை எட்டியுள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த Cocomelon - Nursery Rhymes என்கிற கல்வி யூடியூப் தளம் 123 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது. 

2019 மே மாதத்தில் 100 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையை அடைந்த டி சீரீஸ்,  அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 200 மில்லியன் ஆதரவாளர்கள் என்கிற யாரும் தொட முடியாத உயரத்தை எட்டியுள்ளது. 

மேலும் பல்வேறு மொழிகளில் 29 யூடியூப் சேனல்களைக் கொண்டுள்ள டி சீரீஸ், ஒட்டுமொத்தமாக 382 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT