செய்திகள்

கட் இல்லாமல் ஒரே டேக்கில் சிம்பு நடித்த மாநாடு காட்சி: 5 நிமிட விடியோவை வெளியிட்ட படக்குழு

மாநாடு படத்தில் சிம்புவின் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். 

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றது.  படத்தில் கிளைமேக்ஸிற்கு முன்பு, சிம்பு எஸ்.ஜே.சூர்யாவிடம் உருக்கமாக பேசும் காட்சி ஒன்று இருக்கும். 

அந்தக் காட்சி சிம்பு பேசும்போது மற்றவர்கள் கவனிப்பது போல் கட் செய்யப்பட்டு காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்தக் காட்சியை சிம்பு 5 நிமிடம் முழுமையாக எந்தக் கட்டும் இல்லாமல் பேசியிருந்ததாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். தற்போது இந்தக் காட்சியை மாநாடு தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT