செய்திகள்

துல்கர் சல்மான் பட போஸ்டரை வெளியிடும் சூர்யா, ஜோதிகா

துல்கார் சல்மானின் முதல் பார்வை போஸ்டரை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து வெளியிடவுள்ளனர்.

DIN


பிரபல நடன இயக்குநர் பிருந்தா திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அதிதி ராவ் ஹைதாரி, காஜல் அகர்வால் நாயகிகளாக நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (டிசம்பர் 20) காலை 11 மணிக்கு வெளியாகிறது. போஸ்டரை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வெளியிடவிருக்கின்றனர். இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்துக்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு மதன் கார்கி கதை திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

சர்வதேச காற்றாடி திருவிழாவை பட்டம்விட்டு தொடக்கிவைத்த மோடி, ஜெர்மனி பிரதமர்!

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

SCROLL FOR NEXT