செய்திகள்

82 வயதில் போட்டிகளில் வென்ற பிரபல நடிகரின் தந்தை : வியப்பில் ரசிகர்கள்

பிரபல நடிகரின் தந்தை போட்டிகளில் வென்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெறற மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், ''உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் அப்பா. நீங்கள் உந்து சக்தியாக திகழ்கிறீர்கள். 

இந்த வயதில் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வெல்வது மிகப் பெரிய சதானை.  என்னை பொறாமைப்பட வைக்கிறீர்கள்'' என்று தெரிவித்துள்ளார். 

விஷாலின் தந்தையான ஜி.கே.ரெட்டி தமிழில் சில படங்களை தயாரித்துள்ளார். யோகா, உடற்பயிற்சி யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வமுள்ளவரான ஜி.கே.ரெட்டி அது குறித்து விடியோக்களை தனது யூடியூப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT