விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் விஜயகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் கட்சிப் பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சி மட்டும் செய்து ஓய்வில் இருக்கிறார்.
இதையும் படிக்க | தன்னை விட 15 வயது இளைய காதலரை பிரிவதாக அறிவித்த சுஷ்மிதா
அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.