'மன்னிக்கவும்' - 'மாநாடு' படம் பற்றி இயக்குநர் செல்வராகவன் விமர்சனம்
மாநாடு படம் தொடர்பாக தனது விமர்சனத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இதையும் படிக்க | 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை சித் ஸ்ரீராம் பாடியதில் என்ன பிரச்னை ?
Advertisement
இந்தப் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், '''தாமதமாய் மாநாடு படம் பார்த்ததற்கு மன்னிக்கவும், ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா அருமை. நண்பர்கள் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடா முயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.