முகப்பு
செய்திகள்

வெளியானது விஜய்யின் மாஸ்டர்: ரசிகர்களுடன் படத்தை ரசித்த மாளவிகா, அனிருத், லோகேஷ் கனகராஜ் (படங்கள்)

மாஸ்டர் படத்தை மாளவிகா, அனிருத், லோகேஷ் கனகராஜ் போன்றோர் சென்னை ரோஹிணி திரையரங்கில்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
படம் - twitter.com/RohiniSilverScr
பகிர்:

இன்று வெளியான மாஸ்டர் படத்தை மாளவிகா, அனிருத், லோகேஷ் கனகராஜ் போன்றோர் சென்னை ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கண்டுகளித்தார்கள்.  

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தார்கள். 

இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஷாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், நடிகை மாளவிகா போன்றோர் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து இன்றைய காலைக் காட்சியைக் கண்டுகளித்தார்கள். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →