முகப்பு
செய்திகள்

மீண்டும் இணைந்த சிம்பு - கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2010-ல் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்ட படம் - விண்ணைத் தாண்டி வருவாயா.

இப்படத்தின் தொடர்ச்சியாக 12 நிமிடக் குறும்படத்தை இயக்கி, கடந்த மே மாதம் வெளியிட்டார் கெளதம் மேனன். ஊரடங்குக் காலத்தில் சிம்புவும் த்ரிஷாவும் அவரவர் வீடுகளில் இருந்து தொலைபேசி வழியாக உரையாடும் விதத்தில் முழு நீளக் குறும்படமும் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் சிம்புவும் கெளதம் மேனனும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.  விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 

இந்தப் படம் சிறப்பாக அமையும் எனத் தோன்றுகிறது. இது நடக்கக் காரணமாக இருக்கும் ஐசரி கணேஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் கெளதம் மேனன் கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →