செய்திகள்

உடற்பயிற்சி செய்தபோது தவறிவிழுந்த நடிகர் கார்த்திக் - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

DIN

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

நவசர நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரஷாந்துடன் இணைந்து ,அந்தகண், என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். 

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு காலில் அடிபட்டு, நன்றாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

தற்போது அடிபட்ட காலில் சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே காலில் மீண்டும் அடிபட்டுள்ளதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். நடிகர் கார்த்திக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

SCROLL FOR NEXT