செய்திகள்

ஹிந்திப் படத்தில் தமிழர்கள் தவறாக சித்திரிப்பு ? - இயக்குநரை கிண்டலடித்த 'பிரேமம்' இயக்குநர்

ஹிந்திப் பட இயக்குநர் ரோகித் ஷெட்டியின் படங்கள் குறித்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் விமரிசனம் செய்தார். 

DIN

ஹிந்திப் பட இயக்குநர் ரோகித் ஷெட்டியின் படங்கள் குறித்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் விமரிசனம் செய்தார். 

தமிழ் மற்றும் மலையாளம் என ஒரு சேர உருவான 'நேரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத் தொடர்ந்து அவர் மலையாளத்தில் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம், கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அவர் தற்போது தனது அடுத்தப் படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் தமிழை ரோகித் ஷெட்டி தவறாக சித்தரித்திருப்பதாக கருத்துக் கூறியிருந்தேன். அது என்னுடைய தனிப்பட்டக் கருத்து, அவருக்கு தமிழர்களை காயப்படுத்துவது குறித்து எண்ணம் இருக்காது என நம்புகிறேன்.

ஏனெனில் இயக்குநர் ஷங்கரின் பாடல்களும் சண்டைக்காட்சிகளும் ரோகித் ஷெட்டிக்கு முன்மாதிரியாக அமைந்திருப்பதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன். என்னுடைய கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன். 

இப்பொழுது நான் 'சிங்கம் 2'(ஹிந்தி) படம் பற்றி நல்ல விஷயங்களை கூறவிருக்கிறேன். அந்தப் படத்தில் அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றதற்காக சிங்கத்தின் அம்மா அவரைக் கண்டிக்கிறார். இந்தக் காட்சி என்னை அழச் செய்துவிட்டது.

என் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலும் இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை. ஒரு தாயிடம் மகன் தோற்பது போல் காட்சியமைத்தற்காக உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். உங்கள் எல்லா படங்களுக்கும் நான் ரசிகன். உங்களது அடுத்தப் படமான சூர்யவன்சிக்காக காத்திருக்கிறேன்''  என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT