முகப்பு
செய்திகள்

ஹாட்ஸ்டாரில் இன்று வெளியான லோகி இணையத்தொடர்

லோகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டு இணையத்தொடர் உருவாகியுள்ளது...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
பகிர்:

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைத் தயாரிக்கும் மார்வெல் ஸ்டூடியோஸ், 23 சூப்பர் ஹீரோ படங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. 2008-ல் முதல் படமாக அயர்ன் மேன் படமும் 23-வது படமாக 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் படமும் வெளியாகியுள்ளன. இந்த வருடம் இரு இணையத்தொடர்களைத் தயாரித்த மார்வெல் ஸ்டூடியோஸ், அடுத்ததாக லோகி என்கிற அட்டகாசமான இணையத்தொடரை இன்று வெளியிட்டுள்ளது.

லோகி கதாபாத்திரம் இதற்கு முன்பு - தோர், தோர்: தி டார்க் வேர்ல்ட், தோர்: ரக்னரோக் ஆகிய படங்களிலும் நான்கு அவெஞ்சர்ஸ் படங்களில் மூன்றிலும் (தி அவெஞ்சர்ஸ், இனிஃபினிடி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்) இடம்பெற்றுள்ளது. இப்போது லோகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டு லோகி இணையத்தொடர் உருவாகியுள்ளது. காட் ஆஃப் மிஸ்சீஃப் என அழைக்கப்படும் லோகியாக டாம் ஹிட்லிஸ்டன் நடித்துள்ளார். பெண் இயக்குநர் கேட் ஹெர்ரோன், இதன் ஆறு எபிசோட்களையும் இயக்கியுள்ளார். 

லோகி இணையத்தொடரின் முதல் எபிசோட் - ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

லோகி முதல் பருவத்தில் ஆறு எபிசோட்கள் உள்ளன. அடுத்த ஐந்து எபிசோட்களும் ஜூன் 16, ஜூன் 23, ஜூன் 30, ஜூலை 7, ஜூலை 14 தேதிகளில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments