முகப்பு
செய்திகள்

சென்னையில் மீண்டும் தொடங்கியது ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு

இம்முறை தமிழ்நாட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்துக்கொள்ள...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தமிழ்நாட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்துக்கொள்ளவுள்ளார்கள். இதற்காக சென்னையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தச் சில நாள்களில் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடந்த பிறகு பொள்ளாச்சி, கோவையில் படப்பிடிப்பு தொடரவுள்ளது.

அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பை முடிக்கப் போதிய அவகாசம் உள்ளது. இதனால் பாதுகாப்பான முறையில் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரவுள்ளார் இயக்குநர் சிவா. 

முழு கட்டுரையைப் படிக்க →