செய்திகள்

இரண்டு வருடங்களாக ஒரே காரணத்துக்காக தள்ளிப்போகும் வலிமை அப்டேட்!

DIN

கடந்த இரண்டு வருடங்களாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் விளம்பரப் பணிகள் அஜித்தின் 50-வது பிறந்த நாளையொட்டி மே 1 முதல் தொடங்கும் என்றும் போனி கபூர் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவித்தார். 

எனினும் மே 1-ம் தேதி வலிமை அப்டேட் வெளிவராது என அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். கரோனா இரண்டாவது அலை வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நாடு முழுவதும் பலர் வருமானம் இன்றி கரோனா பற்றிய பயத்தில் உள்ளார்கள். படக்குழுவினரின் முடிவின்படி வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு வேறொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றார் போனி கபூர்.

இந்த வருடம் மட்டுமல்ல கடந்த வருடமும் இதே காரணத்துக்காக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஏப்ரல் 30 அன்று வெளியிட்ட அறிக்கையில் போனி கபூர் கூறியதாவது:

கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்யவேண்டாம் என எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT