தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு இலவச சிகிச்சை, மே 16 முதல் ஆவின் பால் விலை குறைப்பு, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், அரிசி குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ. 4000, 100 நாள்களில் தீர்வு திட்டத்துக்கு புதிய துறை ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அனைத்துப் பெண்களும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் நாளை முதல் இலவசமாகப் பயணிக்கலாம், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு இலவச சிகிச்சை ஆகிய அறிவிப்புகளுக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கான அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் ஆகிய அரசின் உத்தரவுகளைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.