முகப்பு
செய்திகள்

பிரபல துணை நடிகர் மாறன் காலமானார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல துணை நடிகர் மாறன் காலமானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல துணை நடிகர் மாறன் காலமானார். 

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த மாறனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு அவர் காலமானார். அவருக்கு வயது 48.

மேடை நாடகக் கலைஞரும், ஸ்டண்ட் கலைஞருமான மணிமாறன் என்ற மாறன், சார்பட்டா பரம்பரை, கில்லி, தலைநகரம், வேட்டைக்காரன், ஏழுமலை, ஏ1 உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.