ரூ. 25 லட்சம் நிவாரண நிதி: முதல்வரிடம் நேரில் வழங்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இத்தொகையை அவர் அளித்தார்.
தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 இலட்சம் வழங்கினார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இத்தொகையை அவர் அளித்தார்.