செய்திகள்

குட்பை மாஸ்டர்: கே.வி. ஆனந்த் நினைவாக விடியோ வெளியிட்ட உதவி இயக்குநர்கள்

DIN

சமீபத்தில் மறைந்த கே.வி. ஆனந்தின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய உதவி இயக்குநர்கள் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். 

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கே.வி. ஆனந்த் (54) கடந்த மாத இறுதியில் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் கே.வி. ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கே.வி. ஆனந்திடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட கே.வி. ஆனந்த் தொடர்பான காட்சிகளைக் கொண்டு மாற்றான் படத்தில் இடம்பெற்ற யாரோ யாரோ நான் யாரோ பாடலைப் பயன்படுத்தி விடியோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த விடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

நீங்கள் தந்த தைரியமும் நீங்கள் கற்பித்த சினிமாவும் என்றும் எங்களை முன்னோக்கியே வழி நடத்தும். குட்பை மாஸ்டர் என்கிற வாசகம் விடியோவின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT