செய்திகள்

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி !

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா வலது தோள்பட்டை வலியின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வலது தோள்பட்டையில் வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து அவருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது  அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தற்போது அவர் போயப்படி சீனு இயக்கத்தில் அகாண்டா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், ஆஹா என்ற ஓடிடி தளத்தில் அன்ஸ்டாப்பபிள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகள் லக்ஷ்மி மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி தீபாவளியை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT