உலகப் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இப்பகுதி உள்ளது. ஒரு வருடத்துக்கு 50 மில்லியன் பேர் இப்பகுதிக்கு வருகிறார்கள். ஒருநாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியைக் கடக்கிறார்கள். அதில் பலரும் சுற்றுலாப் பயணிகள். வணிக வளாகங்கள், மால்கள் நிறைந்த டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வதால் பெரிய கவனம் கிடைக்கும்.
இந்நிலையில் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா இடம்பெற்ற ஸ்பாடிஃபை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இளையராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.