கரோனாவால் பாதிக்கப்பட நடன இயக்குநர் சிவசங்கர்: உதவ முன் வந்த பிரபல நடிகர்
கரோனாவால் பாதிக்கப்பட்ட நடன இயக்குநருக்கு பிரபல நடிகர் சோனு சூட் உதவி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடன இயக்குநர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவரது குடும்பத்தினர் மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அவரது மருத்துவ செலவுகளுக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரான சோனு சூட் அவருக்கு உதவ முன் வந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நான் அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன். அவரைக் காப்பாற்ற என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
நடன இயக்குநர் சிவசங்கர் இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கும் இவர் நடனம் அமைத்துள்ளார். வரலாறு, பரதேசி, கண்ணா லட்டு தின்ன ஆசை போன்ற படங்களில் நடித்துள்ளார்.