செய்திகள்

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் புதிய இணையத்தொடர்: ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹாக் ஐ

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையத்தொடரான ஹாக் ஐ, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

DIN

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையத்தொடரான ஹாக் ஐ, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைத் தயாரிக்கும் மார்வெல் ஸ்டூடியோஸ், 26 சூப்பர் ஹீரோ படங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. 2008-ல் முதல் படமாக அயர்ன் மேன் படமும் 26-வது படமாக இந்த வருடம் எடர்னல்ஸ் படமும் வெளியாகியுள்ளன. இந்த வருடம் நான்கு இணையத்தொடர்களைத் தயாரித்த மார்வெல் ஸ்டூடியோஸ், அடுத்ததாக ஹாக் ஐ (Hawkeye) என்கிற அட்டகாசமான இணையத்தொடரை வெளியிட்டுள்ளது. ஹாக் ஐ இணையத் தொடரின் முதல் பருவத்தின் இரு பகுதிகள் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் ஒரு தொடர்ச்சியாக இந்த இணையத்தொடர் உள்ளது. 

ஹாக் ஐ இணையத்தொடர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான கிளிண்ட் பார்டன் கதாபாத்திரத்தில் ஜெரிமி ரென்னரும் கேட் பிஷப் கதாபாத்திரத்தில் ஹைலீ ஸ்டீன்ஃபெல்டும் நடித்துள்ளார்கள். முதல் இரு பகுதிகளை ரைஸ் தாமஸ் இயக்கியுள்ளார். 

ஹாக் ஐ இணையத்தொடரின் புதிய பகுதிகள் ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமை அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதான் சிறந்த கிறிஸ்துமஸ் ஆக இருக்கப்போகிறது. ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக என் குழந்தைகளை நியூயார்க்-குக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்... அப்போதுதான் என்னைக் கொல்ல பல பேர் வந்தார்கள்... என்கிற வசனங்களுடன் சமீபத்தில் வெளியான ஹாக் ஐ இணையத்தொடரின் டிரெய்லர், பரபரப்பான காட்சிகளால் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஹாக் ஐ இணையத்தொடரை பார்க்கத் தயாராகி விட்டீர்களா? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT