செய்திகள்

பொது இடத்தில் நடிகரின் கையை கடித்த நடிகை : வைரலாகும் விடியோ

பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலலில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதில் விஷ்ணு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. 

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவபாலாஜியின் கையைக் கடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் ஹேமாவிடம் கேட்டதற்கு, சிவ பாலாஜியிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார். ஆனால் சிவ பாலாஜி இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.  தேர்தலின் போது பிரகாஷ் ராஜ் அணிக்கும், விஷ்ணு மஞ்சுவின் அணிக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே ஹேமா அப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT