செய்திகள்

பிக்பாஸில் அபிஷேக் சொன்ன கதை எப்படி இருந்தது?: ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியின் அதிரடி விமரிசனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் சொன்ன கதையை ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் விமரிசனம் செய்கின்றனர். 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் சொன்ன கதையை ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் விமரிசனம் செய்கின்றனர். 

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய கதைகளை உருக்கமாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில், அபிஷேக் தன்னுடையை அப்பா குறித்து பேசுகிறார். 

இந்த நிலையில் அபிஷேக் பேசியது குறித்து இமான் அண்ணாச்சியும், ராஜு ஜெயமோகனும் விவாதித்துக்கொள்கிறார்கள். அதில் வீட்டுக்கு பொருட்கள் விற்க வருபவர்கள் நமக்கு தேவையோ தேவையில்லையோ பொருட்களை வாங்க வைத்துவிடுவார்கள். அபிஷேக் பேசத் துவங்கிய போது அந்த மாதிரி தான் இருந்தது. 

ஆனால் அவர் அப்பா குறித்து பேசியபோது என்னாலும் அதனை உணர முடிந்தது என்று ராஜூ சொல்கிறார். அதற்கு பதிலளிக்கும் இமான், எனது வீட்டை இரண்டு வருடத்தில் மீட்டேன் என்று சொன்னது எனக்கு பிடித்திருந்தது என்கிறார். 

வீட்டில் இருப்பவர்கள் தனித்தனி குழுவாக பிரியத் துவங்கயிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்குள் பிரச்னைகள் தலைதூக்கத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷாமு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT