செய்திகள்

'தர்மதுரை 2' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா ?

தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ருஷ்டி டாங்கே, ராதிகா, ராஜேஷ், எம்.எஸ்.பாஸ்கர், மதுவந்தி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் தர்மதுரை. விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற இந்தப் படம் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் பெரிதும் கைகொடுத்தன. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற எந்தப் பக்கம் காணும்போது பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டார். 

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்குப் பதிலாக புதிய நடிகர் நடிப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த சீனு ராமசாமி தர்மதுரை 2 படத்தை தான் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும், வேறு இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்துவிட்டது 9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள்! விலையைப் பற்றி கவலை வேண்டாம்!!

விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT