முகப்பு
செய்திகள்

’தலைவா ரஜினிகாந்த் வாழ்த்துக்கள்’- சச்சின் டெண்டுல்கர்

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகா் ரஜினிகாந்துக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 26 அக்டோபர், 2021 at 3:43 PM
’தலைவா ரஜினிகாந்த் வாழ்த்துக்கள்’- சச்சின் டெண்டுல்கர்
பகிர்:

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகா் ரஜினிகாந்துக்கு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியத் திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின் மிக உயரிய விருதான  தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது வழக்கம். தனித்திறன் மிக்க கலைஞர்களே அந்த விருதைப் பெறுவார்கள் என்பதால் பலருக்கும் தாதா சாகேப் பால்கே விருதின் மேல் தனி கவனமும் மரியாதையும் உண்டு.

Advertisement

இந்நிலையில் இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.இதனால் பல்வேறு தலைவர்கள் , பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து வரும் வேளையில் ரஜினிகாந்துக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’தலைவா ரஜினிகாந்த்’ எனக் குறிப்பிட்டு ஒவ்வொரு முறையும் தன் திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அவருக்கு என் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.