அட்லி - ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா ?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
செய்திகள்அட்லி - ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா ?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
பிகில் படத்துக்குப் பிறகு இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெர்சல், பிகில் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தாமதாமாகியுள்ளதால் இந்தப் படத்தில் இருந்து நயன்தாரா விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய நடிகையை பயன்படுத்துவது என இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் ஆகியோர் முடிவெடுத்திருக்கிறார்கள். ஏனெனில் தென்னிந்திய நடிகை நடித்தால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் விளம்பரப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம்.
தற்போது நயன்தாரா வெளியேறியுள்ளதால் அவருக்குப் பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகை பிரியாமணி, ஃபேமிலி மேன் தொடர் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார்.