முகப்பு
செய்திகள்

முதன்முறையாக வலிமை வில்லனின் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

நடிகர் கார்த்திகேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

நடிகர் கார்த்திகேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகியுள்ளது.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் சிறப்பு போஸ்டரை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →