செய்திகள்

மீண்டும் நடிக்க வரும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' நடிகை (படங்கள்)

DIN

1987-ல் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமானார் பிரபல நடிகை பானு ப்ரியாவின் தங்கையான சாந்தி ப்ரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திப் படங்களில் நடித்த சாந்தி ப்ரியா, 1995-ல் பாஸிகர் படத்தில் நடித்த சித்தார்த் ரேவைத் திருமணம் செய்துகொண்டார். 2004-ல் சித்தார்த் மரணமடைந்தார். இரு மகன்கள் உள்ளதால் சொந்த வாழ்க்கையில் அதிகக் கவனம் செலுத்தினார் சாந்தி ப்ரியா. கடைசியாக 1994-ல் திரைப்படங்களில் நடித்தார். நடுவில் சில தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும் நடித்தார். 

2012-லிருந்து நடிப்பதிலிருந்து ஒரேடியாக விலகியிருந்த 50 வயது சாந்தி ப்ரியா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ ஒரிஜினல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடிக்காக ஓர் இணையத் தொடரில் நடிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT