செய்திகள்

'வலிமை'க்குப் பிறகு 3 வது முறையாக இணையும் அஜித் - வினோத் கூட்டணி : தயாரிப்பாளர் தகவல்

வலிமை படத்துக்குப் பிறகு 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார்.

DIN

வலிமை படத்துக்குப் பிறகு 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார்.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். மேலும் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த பேட்டியில், வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் மொத்த படப்பிடிப்பு முடிவடைந்தவிடும். மீண்டும் எனது தயாரிப்பில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தையும் வினோத் இயக்குவார் என்று தெரிவித்தார்.  மூன்றாவது முறையாக போனி கபூர், அஜித் மற்றும் வினோத் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

ராகுலுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்..! - பிரசாந்த் கிஷோர் கறார்!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டீசர்!

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்கள்

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!' -பிரியங்கா

SCROLL FOR NEXT