முகப்பு
செய்திகள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் : யோகி பாபு சொன்ன தகவல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக யோகி பாபு அதிரடியாக பதிலளித்தார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக யோகி பாபு அதிரடியாக பதிலளித்தார். 

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன்  பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமக்கிறார். 'நண்பன்' படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா  இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் நடிகர் யோகி பாபுவிடம் 'பீஸ்ட்' படத்தில் எப்போது நடிக்கிறீர்கள் என்று கேட்க, நாளை முதல் என பதிலளித்துள்ளார். இந்த தகவல் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' என நடிகர் விஜய் - யோகி பாபுவுக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இருவரும் 4வது முறையாக இருவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.