முகப்பு
செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்: வெளியான விடியோ

தளபதி 66 படத்துக்காக 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

தளபதி 66 படத்துக்காக 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிகர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இயக்குநர் செல்வராகவன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி 66 படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். விஜய் - பிரகாஷ் ராஜ் இணைந்து கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →